பெரிய பரபரப்புகளைக் கிளப்பிக் கொண்டிருந்த தசாவதாரம், குசேலன் இரண்டுமே வெளியாகிவிட்டன.
ரூ.150 கோடியில் ரஜினியின் ரோபோவும், கிட்டத்தட்ட அதே அளவிலான பட்ஜெட்டில் கமல்ஹாசனின் மர்மயோகியும் அடுத்த பரபரப்புக்கு ஆயத்தமாகவுள்ளன. கிடைக்கிற கேப்பில் சின்னச் சின்ன பிரமாண்டங்கள் ரசிகர்களை அசத்தவுள்ளன.
அப்படி வரப் போகிற ரூ.45 கோடி பிரம்மாண்டம் கலைப்புலி தாணுவின் கந்தசாமி. படத்தை எடுத்து முடித்த கையோடு நல்ல விலைக்கும் விற்று விட்டார் தாணு. இந்தப் படத்தின் தமிழ், தெலுங்கு உரிமையை ரூ.65 கோடிக்கு ஓசைப்படாமல் விற்றிருக்கிறாரா தாணு.
இது குறித்து இயக்குநர் சுசி கணேசன் சமீபத்தில் இப்படி பேட்டியளித்திருந்தார்:
இந்தப் படம் மிகச் சிறந்த பொழுது போக்குக்கு உத்தரவாதம் தரும். இதைச் சொல்லித்தான் அந்த விலைக்கு விற்றுள்ளோம். கொடுக்கும் காசுக்கு இருமடங்கு சந்தோஷம் தரப்போகிற படம்.
இந்தப் படத்தின் ஹைலைட் விக்ரம் - ஸ்ரேயா இருவரும் மெக்ஸிகோவில் போட்ட சல்ஸா ஆட்டம்தான். மாமா மியா... எனத் தொடங்கும் அந்தப் பாடல் ஒரிஜினலாக இருக்க வேண்டும் என்பதற்காக ரொம்ப மெனக்கெட்டோம். மிக அற்புதமாக வந்திருக்கிறது என்று கூறியுள்ளார்.
நல்லது சாமி!Tags: Latest News, Shreya, Vickram